இன்று, குடும்பம் மற்றும் நண்பர்களுடன், குழந்தைகளின் இதயங்களில் தனி இடத்தைப் பிடித்து, மங்களகரமான தொடக்கங்கள் எல்லாவற்றுக்கும் தெய்வமாக வழிபடப்படும் விநாயகப் பெருமானை போற்றும் வேத முறையான கணபதி ஹோமத்துடன் நல்லமுது இயற்கை அங்காடியின் பயணமும் இனிதே துவங்குகிறது. இந்த சடங்கு மூலம், நல்லமுது அங்காடியின் சூக்கும சுத்தப்படுத்தலுடன், இறையருளும் ஒருங்கே பெற்றதாக நம்புகிறோம்.
கடந்த தலைமுறையினரால் அனுபவிக்கப்பட்ட சுவை மற்றும் பாரம்பரியத்தை திரும்ப கொண்டு வருவதே நமது கனவு. இன்றைய குழந்தைகள் ஆரோக்கியமான, பூர்வீக உணவுகளை அனுபவித்து வளர வேண்டும். விநாயகப் பெருமானை குழந்தைகள் மிகவும் அன்புடன் இன்றும் வழிபடுவது போல், அவருக்கு அக்காலத்தில் படைத்த பாரம்பரிய தின்பண்டங்களின் செழுமையையும், புதிய தலைமுறையின் வாழ்வில் ஆரோக்கியத்தையும் கொண்டு நிரப்ப பெற்றோர்களாகிய நாம் முயற்சிப்போம்.
ஓவியர் சில்பியின் இந்த அழகிய கலைப் படைப்பின் பகிர்வுடன், எங்களின் இந்த பயணத்தின் தொடக்கத்தை உங்கள் அனைவருடனும் பங்கிடுவதில் பெருமை கொள்கிறோம் 🙏
